Categories
மாநில செய்திகள்

Breaking: மாணவர்களுக்கு ஏப்ரல் வரை இலவச டேட்டா… முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில மாணவர்கள் இணைய வசதி இல்லாமல் கல்வி கற்க முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்றவாறு இணைய வசதிக்காக கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு எல்காட் நிறுவனத்தின் மூலம் இலவச டேட்டா கார்டு வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால் ஏப்ரல் வரை கல்லூரிகள் திறக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பு கல்லூரி மாணவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |