Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களுக்கு கொரோனா…. பள்ளி மூடல் – பரபரப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததால் செப்-1 முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மற்றும் சமயபுரம் பகுதிகளில் பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் பள்ளியை சேர்ந்த 9 மாணவர்களுக்கும், அரசு உயர்நிலை பள்ளி மாணவிக்கும் கொரோனா உறுதியானதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளை மூடி கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

Categories

Tech |