Categories
மாநில செய்திகள்

Breaking: மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தி… செம உத்தரவு… உடனே போங்க…!!!

தமிழகத்தில் கல்லூரிகளில் சேர்ந்து பிறகு விலகிய மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணத்தையும் திருப்பித் தரவேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதனையடுத்து தமிழகத்தில் சில கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் சேர்ந்த பின்னர் விலகிய மாணவர்களுக்கு முழு கல்வி கட்டணத்தை திருப்பித்தர வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. 2020-2021 ஆம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இது பொருந்தும். மேலும் உத்தரவை மீறி செயல்படும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |