ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் கட்டணம் வசூலிக்க பட்ட நிலையில், இனி எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.13,610 மட்டுமே வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.