நீட் தேர்வு அச்சத்தினால் தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து இன்று இந்த உயிர்க்கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழியும் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மாணவ செல்வங்களின் உயிர்பலிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,
இதனை முதலமைச்சராக மட்டுமன்றி ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கேட்டுக் கொள்கிறேன். சமரசமில்லாச் சட்ட போராட்டத்தால் நீட்டை விரட்டுவோம் என்ற உறுதியினை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன். உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.