தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் குறித்து திட்டமிடுவதாக மாணவர்களின் விவரங்களை EMIS இணைய தளத்தில் பதிவிட பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் வீடுகளில் லேப்டாப், கல்வி தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட்போன் போன்ற ஆன்லைன் வகுப்புகளுக்கான மாணவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களின் விவரங்களை பதிவிட வேண்டும் என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.