கொரோனா போது முடக்கம் காரணமாக இந்த ஆண்டு பள்ளி நடைபெறாத நிலையில் தற்போது பொது தேர்வு இன்றி 9, 10, 11 மாணவர் தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் கேள்வி நேரம் முடிந்த பிறகு 110 விதியின் கீழ் இரண்டு மிக முக்கியமான அறிவிப்பினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்றும், 9, 10, 11 ஆகிய ஆகிய மூன்று வகுப்புகளுக்கான மாணவர்கள் பொதுத் தேர்வு இன்றி தேர்ச்சி பெறுவார்கள் என்ற ஒரு அறிவிப்பையும் தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.
12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தேதி என்பது அறிவிக்கப்பட்டுவிட்டது. மே 2-ஆம் தேதியிலிருந்து 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு என்பது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 9 10 11 ஆகிய மூன்று வகுப்புகளுக்கு ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு அதற்கான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் அவர்களுக்கான பொதுத் தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் தேர்வின்றி ஆல் பாஸ் என முதல்வர் அறிவித்துள்ளார்.