தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் குடியரசு தின விழாவை பள்ளி மாணவர்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் பார்வையாளர்கள் காண நேரில் வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்தப்படும். குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.