பரங்கிமலை ரயில் முன் தள்ளிவிட்டு மாணவியை கொலை செய்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞருக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 1 மணியளவில் சத்யா என்ற மாணவி கல்லூரிக்கு செல்வதற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர் சதிஷ் அவரிடம் காதல் தொந்தரவு கொடுத்து வாக்குவாதம் செய்து ஆத்திரத்தில் அங்கு வந்த ரயில் முன்பு தள்ளிவிட்டுள்ளார். இதில் தலை துண்டாகி கொடூரமாக மாணவி உயிரிழந்தார். இதையடுத்து சதீஷ் அங்கிருந்தவர்களிடம் தப்பித்து ஓடி விட்டார்.. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று இரவு துரைப்பாக்கம் அருகே வைத்து கைது செய்தார்கள். ஏழு தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் கைது செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சதீஷிடம் விரிவான விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. அதில், கடந்த 5 வருடமாக காதலித்த சதீஷ் அதன் பின்பு அவரது நடவடிக்கை பிடிக்காததால் சத்யா அவருடைய தொடர்பை நிறுத்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து சத்யாவுக்கு சதீஷ் தொந்தரவு கொடுத்து வந்ததன் காரணத்தினால் காவல்துறையில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து அவர் காதல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் நேற்று வழக்கம்போல் மாணவி சத்யா கல்லூரிக்கு செல்லும்போது ரயில் வரும் நேரம் பார்த்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக முழுமையான வாக்குமூலத்தை காவல் நிலையத்தில் வைத்து பெறப்பட்ட நிலையில், விசாரணை விசாரணை முடிந்து தற்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உள்ள 9ஆவது நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனாம்பாள் முன்பு போலீசார் ஆஜர் படுத்தினர். இதையடுத்து மாணவி சத்யபிரியாவைக் கொலை செய்த சதீஷ்க்கு 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக சதிஷை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் போது அவரது முகத்தை துணியால் மூடி அழைத்து வந்தார்கள். அப்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கறிஞர்கள் ஏன் ஒரு கொலை குற்றவாளியை முகத்தை மறைத்துக் கொண்டு வருவீர்கள் என்று கேட்டனர். இதனால் வழக்கறிஞர்களுக்கும் போலீசார்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதேசமயம் வழக்கறிஞர்கள் சதீஷை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது..