கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மர்ம மரணம் விவகாரத்தில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர். இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் மாணவி மரணம் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
அதில் முதல் கட்ட நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர் அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஷ்ரவன் குமார் ஜட்டாவத்தும்,மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.