Categories
மாநில செய்திகள்

#BREAKING: மாதம் ரூ.1,000…. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு……!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் நடைபெற்றது.

இந்நிலையில் பாலிடெக்னிக் ஐடிஐ மாணவிகளுக்கும் மாதம் ரூபாய் 1,000 கிடைக்குமா? என்ற கேள்விக்கு சட்டப்பேரவையில் விளக்கமளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறினார். மேலும் காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டு திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |