தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து சற்றுமுன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
சற்றுமுன் நிலவரப்படி மாநகராட்சி பகுதியில் திமுக 21 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும், மற்றவை 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் பேரூராட்சி பகுதியில் திமுக 167 இடங்களிலும், அதிமுக 23 இடங்களிலும், மற்றவை 527 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. நகராட்சி பகுதியில் திமுக 22 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.