Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு!!

மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் தங்களது எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.. அதனை தொடர்ந்து டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு போட்டியிடுவதாக திமுக அறிவித்தது..

இதனை தொடர்ந்து சென்னை, தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாவதாக அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இருவரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ள நிலையில், போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.. தற்போது இவர்கள் இருவரும் தேர்வாகி இருப்பதால் மாநிலங்களவையில் திமுகவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த செல்வகணபதி போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |