மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக எம்பிக்கள் ஆக இருந்த வைத்தியலிங்கம், கே.பி முனுசாமி ராஜினாமாவை தொடர்ந்து தமிழகத்தில் மாநிலங்களவை பதவிக்கான 2 இடங்கள் காலியாக இருந்தன… காலியாக உள்ள 2 மாநிலங்களவை பதவிக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.. இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்..
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் :
டாக்டர் கனிமொழி என்.வி.என் சோமு
கே.ஆர்.என் ராஜேஷ்குமார்
மாநிலங்களவைத் தேர்தலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர்களான டாக்டர் கனிமொழி சோமு திமுக மருத்துவர் அணி செயலாளராகவும்,கே.ஆர்.என் ராஜேஷ்குமார் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளனர்..