புதுச்சேரி, காரைக்காலில் கடந்த 10 நாட்களாக 50 சதவீத குழந்தைகள் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வேகமாக பரவி வரும் ப்ளுகாய்ச்சல் காரணமாக புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று முதல் வருகின்ற 25-ம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக நம் மாநில அரசு அறிவித்துள்ளது.
குழந்தைகளின் சுவாசம் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் காய்ச்சல் பரவுகிறது.அதிலும் குறிப்பாக பள்ளிகளில் அதிக அளவில் பரவுவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதே போலவே சென்னையிலும் இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் விரைவில் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.