நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் மாநகராட்சி பகுதியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. திரையரங்குகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் போன்ற இடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.