உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வந்ததன் காரணமாக விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்ததையடுத்து விமான சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை வீசத்தொடர்த்தியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு மார்ச் 31 வரை தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.