Categories
மாநில செய்திகள்

#BREAKING: மார்ச் 9 வரை நீதிமன்ற காவல்….. ஜெயக்குமார் ஜாமீன் மனு தாக்கல்….. வெளியான தகவல்….!!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதன்பின் ஜெயகுமாரின் ஜாமீன் மனு இன்று(பிப்…23) விசாரணைக்கு வந்த நிலையில் ,மேலும் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து 2-வது வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9 வரை நீதிமன்ற காவல் விதித்து ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டு உள்ளதால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..

Categories

Tech |