தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “மக்களுடைய பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்து வைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் கனவுகள் நிறைந்த கண்களோடு, கவலைகள் நிறைந்த இதயத்தோடு, காத்திருப்பதை பார்க்கும் பொழுது மனம் கரைகின்றது. அதிக மனுக்களை தீர்த்து வைக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கேடயம் வழங்குவதை விட, குறைவான மனுக்கள் எந்த மாவட்டத்தில் இருந்து வருகிறதோ அவர்களுக்கு கேடயம் அளிக்கும் நடைமுறையை கொண்டு வரும் அளவுக்கு உங்கள் பணி இருக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
Categories