நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு நடிகர் விஜய் மற்றும் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் திரைக்கு வர இருப்பதால், விஜய் மற்றும் சிம்பு ஆகிய நடிகர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது விதிமீறல்,உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் 50 சதவீத இருக்கைக்கு அனுமதி என்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 100% இருக்கைக்கு அனுமதி என்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெறும் பட்சத்தில், “மாஸ்டர்” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக 400 இணையதளங்கள், 9 கேபிள் டிவி களில் இப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படம் இணையத்தில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்று படத்தை வெளியிடும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது.