நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்ததையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கொரோனா மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே கொரோனா நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் நலமுடன் திரும்புவேன்” என்று பதிவிட்டுள்ளார்.