கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி.
மக்களிடம் உரையாற்றிய பிரதமர், நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் என நம்புகிறேன்.தற்போதைய கொரோனா பாதிப்பில் இருந்து நம்மால் மீண்டுவர முடியும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்ததைவிட மருந்து உற்பத்தியில் பலமடங்கு உயர்ந்துள்ளது. ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை பூர்த்தி செய்வோம்.
மத்திய மாநில அரசுகளும் மக்களும் இணைந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும். நம் நாட்டில் மிகப்பெரிய மருந்து நிறுவனங்கள் உள்ளன, எனவே கவலை தேவையில்லை. மருந்து நிறுவனங்களுடன் உற்பத்தி அதிகரிக்க தொடர்ந்து பேசி வருகின்றேன் என பிரதமர் மோடி பேசினார்.