இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மீது அரியானா போலீசார் பரபரப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது ஹரியானா போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் 8 மாதங்களுக்கு முன்பு இந்திய வீரர் யுகேந்திர சாஹல் குறித்து ஒரு வீடியோவில் கிண்டலடித்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அப்போது அவர் தலித் சமூகம் குறித்தும் அனாகரிகமான வார்த்தையை பயன் படுத்தியதாக 153, 153 ஏ, 295, 505 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோ வெளியான போதே அவர் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.