சென்னையில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் ஆர்சிபி அணியின் இளம் தொடக்க வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஏப்ரல் 9ஆம் தேதி நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலத்த கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. அதுமட்டுமன்றி அணியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிறகுதான் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார்கள். அதுமட்டுமன்றி மைதானத்தில் பார்வையாளர்களுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் இளம் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தி கொண்டதாகவும், முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது.