தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுயடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கிடுவதில் இழுபறியும், கூட்டணி குறித்த குழப்பமும் நீட்டித்து வருகின்றது.
இந்நிலையில் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரான செந்தில் பாஜகவில் இணைந்தார். சென்னையில் மாநில தலைவர் முருகன் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.