இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப்(99) காலமானார். இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர் இவர். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு வீட்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தனது வின்ஸ்டர் கேசில் அரச மாளிகையில் அவர் உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.