Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மின்சார ரயில்சேவை ரத்து…. பயணிகளுக்கு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக சென்னையில் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்சேவை ரத்து  செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |