மின்வாரிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடக்கவிருந்த நிலையில் அவை அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மின்வாரியம் சார்பில் உதவி பொறியாளர் பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 24 முதல் மே 16 வரை கணினி வழித் தேர்வு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது நடக்கவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கணினி வழி எழுத்து தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.