Categories
மாநில செய்திகள்

BREAKING: மின் கட்டணம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மக்கள் சிரமமின்றி மின் கட்டணத்தை செலுத்த ரீசார்ஜ் முறையை கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மின் கட்டணம் செலுத்த புதிய ரீசார்ஜ் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது இந்தியாவில் தற்போது டெல்டா ப்ளஸ் தொற்று புதிதாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் மூன்று லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் திட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் சிரமம் இன்றி மின் கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறையை கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் ரூ. 3.03 லட்சம் கோடியில் புதிய மின் திட்டங்களுக்கு ஒப்புதல், புதிய மின் பாதை அமைத்தல், விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் ஆகியவை குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |