சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மூத்த வழக்கறிஞரும் மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான சோலி சொராப்ஜி(91) காலமானார். கொரோனா பாதிப்பிலிருந்து மனைவி குணமடைந்த நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.