நாடு முழுவதும் கொரோனா பரவல் குறித்து தமிழகம் உட்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி நோய் கட்டுப்பாட்டு பகுதியில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் உருமாற்றம் அடைந்து வரும் வைரசின் அபாயம் அதிகமாக இருக்கும். நாட்டின் மொத்த பாதிப்பில் 80 சதவீதம் பாதிப்பு ஆறு மாநிலங்களில் இருந்து மட்டும் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.