Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் கதவை தட்டும் OPS….. அதிரடி முடிவு….!!!!

அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி சுந்தர மோகன் அமர்வில் அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கட்சிக்குள் மீண்டும் இபிஎஸ் கை ஓங்கியது. பொதுக்குழு நியமனத்தின்படி, இடைக்காலப் பொது செயலாளர் ஆனார் இபிஎஸ். இதனால் அதிருப்தியில் இருக்கும் ஓபிஎஸ், திங்களன்று உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுகிறார். இபிஎஸ்சின் பொதுக்குழு கூட்டம் செல்லாது என மீண்டும் தடை கேட்க இருக்கிறார் ஓபிஎஸ்.

Categories

Tech |