தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னை அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னைக்கு அருகே மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வங்ககடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்த மழைக்கே மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளான நிலையில் மீண்டும் மழை பெய்யப் போகிறது.