கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கு குறைவாக உள்ள மாவட்டங்களில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது தான் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பள்ளிகள் திறப்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொரோனா பாதிப்பு வீதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் இயங்கும் பள்ளிகள் திறப்பதற்கு அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்திய குழந்தைகள் கொரோனாவிற்கு எதிராக நல்ல எதிர்ப்பாற்றலை பெற்றுள்ளனர் என்றும், இதனால் பள்ளிகளை திறக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல மாநிலங்களில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பையிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.