Categories
மாநில செய்திகள்

#Breaking: மீண்டும் 33 தமிழக மீனவர்கள் சீசெல்சில் கைது…. பரபரப்பு…..!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சொல்லி குமரி மாட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த 33 மீனவர்களை சீசெல்சு நாட்டு கடற்படையினர் சிறைபிடித்தனர்.

மேலும் மீனவர்களை கைது செய்த கடற்படையினர் 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதற்கு முன்னதாக கன்னியாகுமரி மீனவர்கள் 8 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 33 மீனவர்கள் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |