சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த டிராஃபிக் ராமசாமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதையடுத்து அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.