Categories
மாநில செய்திகள்

Breaking: முதன் முறையாக போட்டியிட்ட… உதயநிதி ஸ்டாலின் அபார வெற்றி..!!

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 2 மணி முதல் தொடங்கியது. பல சுற்றுகளில் வாக்குகள் எண்ணபட்டது. ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த திமுக கட்சி 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதை அடுத்து திமுக சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.

இவர் இந்த தேர்தலில் முதன் முறையாக போட்டியிடுகிறார். இதையடுத்து சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 17,062 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Categories

Tech |