Categories
மாநில செய்திகள்

BREAKING: முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல்…. 77.43% வாக்குகள் பதிவு… மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

9 மாவட்டங்களில் நடந்த முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 77. 43 சதவீத வாக்குகள் பதிவாளராக மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் விடுபட்டு 9 மாவட்டங்களுக்கான முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 6 ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலில் 77.43 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம்  தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது…

தமிழகத்தில் நேற்று முன்தினம் 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் கட்ட வாக்கு பதிவு அமைதியாக நடந்து முடிந்த நிலையில், முழுமையான வாக்குப்பதிவு விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதிகளவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 84. 30 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

காஞ்சிபுரம் – 84. 30%

செங்கல்பட்டு – 66.71%

வேலூர் – 77.63%

ராணிப்பேட்டை – 80.89%

விழுப்புரம் – 83.66%

கள்ளக்குறிச்சி – 82.25%

நெல்லை –  70.81%

தென்காசி – 73.96%

திருப்பத்தூர் – 78.88%

Categories

Tech |