முதல்வர் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் காரணமாக ஹெர்னியா அறுவை சிகிச்சை மேற்கொள்ள முத்ல்வர் பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் வந்துள்ளதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரை தொடர்ந்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.