கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக அந்த கட்சித் தலைவர்களே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா இன்று மாலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பாவின் மகன் அரசியலில் அதிக தலையீடு செய்வதாக பிஜேபியின் உறுப்பினர்களே குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த ராஜினாமாவை அறிவித்துள்ளார்.