தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் விழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில்தான் வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு யாரும் பொதுவெளியில் சிலையை வைத்து வழிபட அனுமதி கிடையாது என்றும், தனித் தனியாக அவரவர் வீட்டில் வைத்து சிலையை வைத்து வழிபட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்து அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க வேண்டும். தமிழக அரசின் உத்தரவை பரிசீலனை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தன. சிலையை பொதுவெளியில் வைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பாஜக அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வரை பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் சந்தித்த பாஜக தலைவர் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.