Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: முதல்வர் பழனிசாமி அதிரடி…. உடனே அனுப்புங்கள்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றது. நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மத்தியில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தமிழகத்தில் தடுப்பு சிறப்பு முகாம் ஏற்படுத்த உள்ளது.

இந்நிலையில் 20 லட்சம் தடுப்பூசிகளை உடனே அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். நாளுக்கு நாள் கொரோனா  அதிகரிப்பதால் தினமும் 2 லட்சம் தடுப்பூசி போட்ட திட்டம் உள்ளது. எனவே குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் தடுப்பூசிகளை உடனே வழங்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |