தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமன்றி கடந்த சில நாட்களாக அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் இன்னும் தேர்தல் குறித்த தேதி அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் முதல்வர் பழனிசாமி சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சேலம் எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மீண்டும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் போட்டியிடுகின்றனர். எடப்பாடியில் போட்டியிட முதல்வரும் போடியில் போட்டியிட துணை முதல்வரும் விருப்பமனு பெற்றுள்ளனர்.