தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திடீரென அனுமதிக்கப்பட்டார். அவர் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நெகட்டிவ் என வந்தது. இதனையடுத்து அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் பழனிசாமி மூன்று நாட்கள் நன்றாக ஓய்வெடுக்க தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குடலிறக்கம் நோய்க்கான சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதை அடுத்து அவர் வீடு திரும்பினார்.