தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. ஒரு சில அரசியல் பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் ட்விட்டரில், இன்று உடல் சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் கவசம் அணியுங்கள். தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
Categories