தமிழக சிறைகளிலிருந்து நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த மேலும் 75 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 21 கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், புழல் வேலூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட சிறைகளில் இருந்து மொத்தம் 96 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புழல் சிறையில் 13, வேலூர் 2, கடலூர் 5, சேலத்தில் ஒருவர், கோவையில் 12, மதுரையில் 22, புதுக்கோட்டையில் 4 பேர் புழல் பெண்கள் தனி சிறையில் 2 பெண்கள் என ஆக மொத்தம் 75 பேர் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். ஆக மொத்தம் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆணைப்படி இதுவரை 96 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் என காவல்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.