தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தன் வரலாற்று நூலான “உங்களில் ஒருவன்” நூலின் முதல் பாகத்தை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி இன்று (பிப்.28) வெளியிடுவதாக இருந்தது. சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் இன்று (பிப்..28) மாலை வேளையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு திமுக பொதுச்செயலாளரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை வகிக்கிறாா். இதையடுத்து திமுக பொருளாளரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆா்.பாலு முன்னிலை வகிக்கிறாா்.
அதனை தொடர்ந்து நூலை ராகுல் காந்தி வெளியிட, கேரள முதல்வா் பினராயி விஜயன் அதை பெற்றுக் கொள்வார் என்று தகவல் வெளியாகியது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” நூலை வெளியிட்டார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.