நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக முதுநிலை நீட்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைத்தனர். நீட் தேர்வை நடத்தினால் உயிரிழப்புக்கள் அதிகமாகும் என்று வலியுறுத்தியதை அடுத்து ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளளாதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.