கடலூர் திமுக எம்பி ரமேசுக்கு அக்டோபர் 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பி ரமேஷுக்கு வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அவர் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன்பின் எதற்கு நான் சரணடைந்தேன் என்று விளக்கத்தையும் அவர் கொடுத்திருந்தார்.. அதனை தொடர்ந்து நீதிபதி முன்பு எம்.பி ரமேஷ் ஆஜர் படுத்தப்பட்டார்.. இந்த நிலையில் முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் அக்டோபர் 13-ஆம் தேதி வரை திமுக எம்.பி ரமேஷ் நீதிமன்ற காவலில் வைக்கப்படுகிறார்..