அதிமுக ஆட்சியின் போது தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி ஆவின் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி வரை பணம் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன், விஜய் நல்லதம்பி ஆகியோர் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தா.ர் இந்த வழக்கு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கின் உண்மைகள் சூழ்நிலை அடிப்படையில் 2 மனுக்களையும் நீதிமன்றம் ஏற்காததால் அவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது.
அதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்வதற்கு காவல்துறை தீவிரம் காட்டினர். அவரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் தர மறுத்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்துள்ளார்.